வள்ளல் அதியமான் பிறந்தநாள்: தருமபுரி எம்.பி.,செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை! - Vallal Athiyaman birthday
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் பிறந்தநாள் சித்திரை பௌர்ணமி அன்று அனுசரிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை பகுதி வள்ளல் அதியமான், ஔவையார் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சிலை அமைத்துள்ளது.
இந்நிலையில் வள்ளல் அதியமான் பிறந்தநாளை ஒட்டி அதியமான் கோட்டத்தில் உள்ள அவர் சிலைக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர், சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில் குமார் அகியோர் அதியமான், ஔவையார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு அதியமான் அவ்வையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.