நான்குவழி சாலை பணிக்காக அம்மன் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாமியாடிய பக்தர்கள்!! - தென்காசி மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
தென்காசி: திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் சுமார் 254.13 கோடி ரூபாய் செலவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீத கிருஷ்ண புரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுணால் என்ற முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது.
இதன் அருகேயுள்ள மிகப் பெரிய ஆலமரம் மற்றும் கோயில் ஆகியவை நான்கு வழிச்சாலை திட்டப் பணிக்காக அகற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாகப் போராடி வந்தனர்.
இன்று ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேல், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ண பாஸ், மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க 100க்கும் பேருக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அதிகாரிகள் கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பக்தர்கள் பரவசத்துடன் சாமியாடி மரத்தை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கோவிலை அகற்றக்கூடாது எனவும் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து சாமியாடிய பக்தர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் மரம் வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இதையும் படிங்க: Viral Video: "கவர்மெண்டுக்கே கை கொடுப்போம்" - துண்டு போட்டு தோள் கொடுத்த மதுப்பிரியர்