அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் திருக்குடை காணிக்கை - Annamalaiyar
🎬 Watch Now: Feature Video
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை (நவ 27) கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் நடைபெற உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின்போது, காலை மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். இதில் சுவாமிகளுக்கு மேல் கட்டப்படும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 10 திருக்குடைகளை, வழக்கம்போல் 18ஆம் வருடமாக ஸ்ரீ அருணாசலா ஆன்மிக சேவா சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த திருக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று, ராஜகோபுரம் முன்பாக ஊர்வலமாக மாடவீதிகளில் வலம் வந்து, அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST