Video: புதுசு புதுசா... யோசிக்கிறாங்கப்பா!... செல்ஃபி ஸ்டிக்கில் மறைத்து தங்கம் கடத்தல்! - Customs department
🎬 Watch Now: Feature Video
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் செல்ஃபி ஸ்டிக்கில் மறைத்து 503 கிராம் எடை கொண்ட ரூ.27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.