உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மக்கள்.. மேம்பாலம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! - heavy rain in tamilnadu
🎬 Watch Now: Feature Video
Published : Dec 4, 2023, 9:31 PM IST
|Updated : Dec 5, 2023, 12:21 PM IST
விழுப்புரம்: தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர்வரத்தானது அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் காணைக்குப்பம் அகரம் சித்தாமூர் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 20 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உடல் நலக் குறைவால் நேற்று (டிச.03) இரவு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை நலடக்கம் செய்வதற்கு பம்பை ஆற்றை கடந்து செல்ல குடும்பத்தினர் அவதிபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைத்தால் அப்பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல், மரக்காணம் தாலுக்கா வண்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து ஆத்து குப்பம் செல்லும் வழியில் இருந்த தரைப்பாலம் முற்றிலும் முழ்கி உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.