குன்னூரில் 78ஆவது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம்... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - குன்னூர் மாரியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான முத்துப் பல்லக்கு ஊர்வலம் இன்று ( ஏப்.21 ) நடந்தது. விழாவில் குன்னூர் வி.பி. தெரு துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து பஞ்சவாத்தியம் முழங்க, பூக்காவடி, தேவி அம்மன், கருட வாகனம், வீர ஹனுமான் போன்ற அலங்கார வாகனங்களுடன் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு தந்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். மேலும், பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ராட்சத கொரில்லா பொம்மையினை சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நின்று கண்டு ரசித்துச் சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதையும் படிங்க: சித்திரை தெப்பத் திருவிழா - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கொடியேற்றம்