ஒரு கடையை அகற்ற சொன்னதால், அனைத்து கடைகளையும் அகற்ற கோரி போராட்டம் - etvbharat tamil
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தார் மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் உள்ள உப்பு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அக்தர் (51). இவர் அன்னூர் பேருந்து நிலையத்தின் முன்புறம் சாலையோர கடையில் துணிகளை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த கடை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறிய பேரூராட்சி நிர்வாகம் அகற்றச் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த வியாபாரி அக்தர் இன்று (மார்ச்.4) கடையில் வைத்திருந்த துணி மற்றும் இதர பொருள்களை அள்ளி சாலையில் போட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்தரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தன்னுடைய கடையை மட்டும் எடுக்காமல் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனை அடுத்து சாலையில் வீசிய பொருட்களை கடையின் உள்ளே வைத்து விட்டு அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.