Chennai airport: விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒத்திகை- தத்ரூபமாக நடித்துக் காட்டிய பாதுகாப்பு படை வீரர்கள்! - terrorist attack at the chennai airport
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-08-2023/640-480-19270940-thumbnail-16x9-che.jpg)
சென்னை விமான நிலையத்தில் இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின் போது, திருக்குறளையும் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டால் எவ்வாறு கையாளுவது என்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். மேலும் வெடி பொருட்களை கண்டறிவதில் மோப்ப நாய்களின் செயல்பாடுகள், கண்டறிந்த வெடிகுண்டு இருக்கும் பைகளை லாபகமாக தூக்கி அப்புறப்படுத்தும் தானியங்கி இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் செயல்முறைப்படுத்தி காட்டினர்.
வீரர்களின் சாகசம், வெடிகுண்டு சத்தம், துப்பாக்கி சத்தம் என விமான நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் களை கட்டியது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் சாகச செயல்களை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் நிகழ்த்திக் காட்டிய இந்த செயல்முறை விளக்கம் பொதுமக்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.