திருச்சியில் சாம்பல் புதன் வழிபாடுடன் தவக்காலம் தொடக்கம்! - சாம்பல் புதன் வழிபாடு
🎬 Watch Now: Feature Video
திருச்சி: கிறிஸ்தவர்களின் தவக் காலத்தின் தொடக்க நாளான இன்று திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி காலையில் நடைபெற்றது. ஆலய பங்குத் தந்தை சகாய ஜெயராஜ் தலைமையில் தவக் கால பிரார்த்தனை திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சாம்பல் புதனன்று தொடங்கியுள்ள ஈஸ்டர் தவக் காலம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும். ஏப்ரல் 9ஆம் தேதியன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் திருவிழா உலகம் முழுவதும் உள்ள அனைத்து சபை கிறிஸ்தவ மக்களாலும் கொண்டாடப்படும்.
தவக் காலத்தின்போது குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழனும், பெரிய வெள்ளியும் ஆகிய தினங்களும் அனுசரிக்கப்படும். திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் ஏராளமான பெண்கள் உட்பட கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கொண்டனர்.
மேலும், நெற்றியில் திருநீறு பூசி இயேசுவின் இறுதிக்கால பாடுகளை நினைவுக்கூர்ந்து பிரார்த்தனை பாடல்களைப் பாடியும் வழிபாடு செய்தனர். இதேபோல திருச்சியில் உள்ள தூய மரியன்னை பேராலயம், உலக மீட்பர் பசிலிக்கா உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் எனப்படும் விபூதிப்புதன் கொண்டாடப்படுகிறது.