சீலிங் பெயர்ந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டடம் - அபாயத்தில் தவிக்கும் குழந்தைகள் - வேலூர் அரசு பள்ளி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17916346-thumbnail-4x3-d.jpg)
வேலூர்: காட்பாடி கோரந்தாங்கல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளி கட்டடம் தற்போது மிகவும் சேதம் அடைந்து பள்ளி கட்டடம் சீலிங் பெயர்ந்து கீழே கொட்டி வருகிறது.
மேலும் பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சு, பள்ளி குழந்தைகள் மேல் விழும் அபாயத்தில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு, ஆரம்பப் பள்ளியில் சேதம் அடைந்த கட்டடங்களை உடனடியாக சரி செய்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எந்த ஒரு அசம்பாவமும் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடிய தந்தையைக் காண சென்ற மகனிடம் அபராதம் விதித்த போலீஸ் - தீக்குளிக்கப் போவதாக ஆடியோ வெளியீடு