சேலம் வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பிரமாண்டமாக தயாராகும் மேடை.. - stalin salem visit
🎬 Watch Now: Feature Video
சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 11,12 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டம் மற்றும் மேட்டூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் சேலம் மாவட்டத்தில் கருப்பு அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ள முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
அந்த விழாவிற்கான பிரமாண்ட மேடை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்காக விழா பந்தல் அமைக்கப்படும் பணிகளை அமைச்சர் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு குடி தண்ணீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, ”தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறக்கப்பட உள்ளது. மேலும் கலைஞர் சிலையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து 2000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சேலம் கருப்பு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் சேலம் மாவட்டத்திற்கான புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு உள்ளார்” என்று அமைச்சர் நேரு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காவல் துறை அதிகாரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சேலம் வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.. ஈபிஎஸ் கோரிக்கை