குளம் போல் மாறிய சென்னை விமான நிலையம்! வீடியோ வைரல்!
🎬 Watch Now: Feature Video
சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் மிக்ஜாம் (MICHAUNG) புயலால் வட தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகரான சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீரானது சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் சென்னை செல்ல கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், செம்பரபாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து அடையாறு ஆற்றில் பெருமளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தின் பின்பகுதி வழியாக, விமான நிலைய ஓடு பாதையில் வெள்ள நீரானது சூழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 மணி வரை முடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் குளம் போல் வெள்ள நீர் தேங்கியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: சென்னை, ஆவடியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு - தமிழக அரசு உத்தரவு!