வீரப்பன் வழிபட்ட கேர்மாளம் ஜெடேருத்ரசுவாமி கோயிலில் தேர் திருவிழா - திரளானோர் பங்கேற்பு - வீரப்பன்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 11:07 PM IST

ஈரோடு: தாளவாடி அடுத்த கேர்மாளம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெடேருத்ரசுவாமி, கும்பேஸ்வரசுவாமி, மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் மலை கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. 

இந்த கோயில் தேர் திருவிழா கடந்த 26ஆம் தேதி தீப ஆராதனையுடன் தொடங்கியது. திங்களன்று (நேற்று) பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் சுவாமி திருவீதி உலா நடந்தது. 

அதைத்தொடர்ந்து இன்று நடந்த தேரோட்டத்தில் 30 அடி உயரம் உள்ள தேரில் உற்சவர் சிலை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தது. இந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் முன்பு இளைஞர்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடிப்பாடி வந்தார்கள். தேரோட்டம் வரும் வழியில் பக்தர்கள் பழங்கள் வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

ஜெடேருத்ரசுவாமி, கும்பேஸ்வர சுவாமி மாதேஸ்வரசுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கடம்பூர், கேர்மாளம், தாளவாடி, ஆசனூர், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவையொட்டி ஆசனூர் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1990ஆம் ஆண்டுகளில் சந்தன கடத்தல் வீரப்பன் இப்பகுதியில் நடமாடியதால் இப்பகுதி அதிரடிப்படை கட்டுப்பாட்டில் இருக்கும். வீரப்பன் வழிபட்டதாக கூறப்படும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.