தாம்பரத்தில் திணை, சித்த மூலிகை தாவர கண்காட்சி: மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்! - மத்திய ஆயுஷ் அமைச்சகம்
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு : தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவம் நிறுவனத்தில் திணை மற்றும் மருத்துவ தாவர கண்காட்சியினை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் துவக்கி வைத்தார். பின்னர், சித்த மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் எந்தெந்த நோய்களுக்கு எவ்வகை மருந்துகள் எந்த அளவில் அளிக்கப்படுகிறது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் மருத்துவ தாவரம் உள்ளிட்டவற்றை குறித்து கலந்துரையாடினார். மேலும், சித்த மருத்துவ மாணவ-மாணவிகள் திணைகளின் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தனர். அதனை அமைச்சர் ஆர்வத்துடன் கேட்டார்.
கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த திணை வகைகளால் உருவாக்கப்பட்ட மனித உடல் உறுப்புகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். சித்த மருத்துவத்தின் ஒளிமையான எதிர்காலம் மாணவர்களின் கையில் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து திணை வகைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை மத்திய அமைச்சருக்கு மாணவ-மாணவிகள் பரிசாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் மீனாகுமாரி மற்றும் சித்த மருத்துவத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.