திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு!
சென்னை: அடையார் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்(31) இவர் சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வினோத் அவரது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.
அப்போது நேற்று நள்ளிரவு நங்கநல்லூர் ஜிஎஸ்டி சாலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வரும்போது திடீரென காரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் திடீரென காரை சாலையிலே நிறுத்தி விட்டு காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கி உள்ளனர். அப்போது கார் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது
இதையடுத்து வினோத் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் இருந்து சேதம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் காரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் புகை வந்தவுடன் சுதாரித்துக் கொண்டு அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் ஜி எஸ் சி சாலையில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை: பேருந்தில் டிக்கெட் எடுக்கவில்லை என பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்!