மின்னல் வேகத்தில் வந்த கார் கடையில் மோதி விபத்து - பதறவைக்கும் சிசிடிவி! - கார் விபத்து சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: சூலூரில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடை சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி ஸ்டோர் மற்றும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து கடையின் முன்புறச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டிச்சென்ற திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சூலூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த கார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கார் அதிவேகமாக வந்து சுவற்றில் மோதி நிற்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் கடை முன் இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமே சேதம் அடைந்தன.
இதையும் படிங்க: டெல்லி வீதிகளில் கூலிங் கிளாஸுடன் கூலாக உலா வரும் அம்ரித் பால் சிங்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!