எருது விடும் விழா... சீறிப்பாய்ந்த காளைகள் - மக்கள் உற்சாகம்! - ஜோலார்பேட்டை எருது விடும் விழா
🎬 Watch Now: Feature Video
ஜோலார்பேட்டை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதே போல் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும் என, அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜல்லிக்கட்டை போல் எருது விடும் விழாவும் தமிழ்நாட்டில் பிரபலம். பெரும்பாலான கோயில் விழாக்களில் இப்போட்டி முக்கிய இடம் வகிக்கும். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள அம்மையப்பன் நகர் பகுதியில் 2ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பத்தூர் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இப்போட்டியை திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்ததை கண்ட மக்கள் உற்சாக குரல் எழுப்பினர். இவ்விழாவில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் மற்றும் 51 பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஜோலார்பேட்டை காவல்துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.