Brahma Kamalam : வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூ..! பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்..! - Brahma Kamalam flower bloom
🎬 Watch Now: Feature Video
Published : Nov 9, 2023, 12:51 PM IST
திருப்பத்தூர்: தென் அமெரிக்கா, மெக்சிகோ நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட பிரம்ம கமலம் பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய தன்மை கொண்டதாகும். இமயமலை போன்ற குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ, படைக்கும் கடவுள் பிரம்மாவிற்கு உகந்த பூவாகக் கருதப்படுவதால், பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டும் இச்செடியில் பூக்கள் மலரும். இரவில் பூக்கும் இம்மலரைக் காண்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் எனவும் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த நீலா என்பவரது வீட்டில் பிரம்ம கமலம் பூவானது பூத்திருந்தது. பூ பூத்ததைக் கண்ட அவரது குடும்பத்தினர் பிரம்ம கமல பூவிற்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இவர், பெங்களூரிலிருந்து பிரம்ம கமலம் பூ செடியை வாங்கி தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாச்சல் கிராமத்தில் நீலா வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிசயமாகப் பார்த்து வணங்கிச் சென்றனர்.