சென்னை விமான நிலையம்: பயணிகள் வசதிக்காக இலவச பேட்டரி வாகனங்கள் அதிகரிப்பு - சென்னை விமான நிலையம்
🎬 Watch Now: Feature Video
சென்னை விமான நிலைய சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை, தற்போது 60 ஆயிரத்தையும் கடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் உள்நாட்டு முனையாம் சர்வதேச முனையும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் இயக்கப்படுகின்றன. இந்த பேட்டரி வாகனம் பயணிகளின் வசதிக்காக இலவச சேவையாக இயக்கப்படுகின்றன.
இந்த வாகனங்கள் உள்நாட்டு முனையத்தில் விமானத்தில் வந்து இறங்கி சர்வதேச முணையம் செல்லும் பயணிகள் சர்வதேச முன்னையத்தில் இருந்து உள்நாட்டு முனையம் செல்லும் பயணிகள் இந்த இரண்டு முனையங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணிகள் ஆகியோருக்கு மிகுந்த வசதியாக உள்ளது. இதனால் இந்த வாகனங்களுக்கு பயணிகள் இடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வாகனத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நான்கு பேட்டரி வாகனங்கள் மட்டுமே இருந்தன. நாளுக்கு நாள் இந்த நான்கு பேட்டரி வாகனங்களும் ஓய்வு இல்லாமல் இரவு பகல் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த 4 பேட்டரி வாகனங்கள் போதுமானதாக இல்லை. எனவே இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்திற்கு மேலும் 4 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்க முடிவு செய்தது.
அதன்படி 4 புதிய பேட்டரி வாகனங்கள் இன்றிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் 8 பேட்டரி வாகனங்கள் பயணிகள் வசதிக்காக இன்றிலிருந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருந்த ஒரு பேட்டரி வாகனத்துடன் தற்போது 2 பேட்டரி வாகனங்கள் இயங்குகின்றன.
அதேபோல் சர்வதேச முனையத்திலும் கூடுதலாக ஒரு பேட்டரி வாகனம் இயக்கப்படுகின்றது. மேலும் சென்னை விமான நிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் விதத்தில் 2 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் இனிமேல் பயணிகளுக்கு உடனுக்குடன் பேட்டரி வாகனங்கள் கிடைக்கும். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை, ட்ராலிகளில் வைத்து தள்ளிக்கொண்டு சிரமப்பட்டு செல்லாமல் பேட்டரி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்த பேட்டரி வாகனங்கள் வயதான பயணிகள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. எனவே அதைப் போன்ற பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரி வாகனங்கள் முழுக்க முழுக்க பயணிகளுக்காக மட்டுமே இலவசமாக இயக்கப்படுகின்றன. பயணிகளாக இல்லாதவர்கள் இந்த இலவச பேட்டரி வாகனத்தில் பயணிக்க அனுமதி இல்லை. இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு