குட்டி யானையிடம் சிக்கிய பைக் ரைடர்.. நூலிழையில் தப்பிய காட்சிகள் - Karnataka
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று (ஜூன் 9) கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அவர், கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜா நகர் மாவட்டத்தில் உள்ள நால் ரோடு சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சாலையில் வந்த குட்டி யானை ஒன்று பைக் ரைடரை தாக்க முயற்சி செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பைக் ரைடர், தனது இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டு விட்டு, அங்கு இருந்து ஓடி உள்ளார். இதனையடுத்து, அந்த குட்டி யானை கீழே கிடந்த இருசக்கர வாகனத்தை பயங்கரமாக தாக்கி உள்ளது. இதனிடையே, அங்கு இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர்.
இதனால், குட்டி யானை அங்கு இருந்து அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த நால் ரோடு பகுதியில் அடிக்கடி யானைகள் சாலையைப் பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்று என அப்பகுதியினர் கூறுகின்றனர்.