ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் ஐயப்பன் சொர்ண அலங்காரம்! - Vaniyambadi
🎬 Watch Now: Feature Video


Published : Dec 9, 2023, 4:41 PM IST
திருப்பத்தூர்: ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனை காண பக்தர்கள் படையெடுத்துள்ளனர். வாணியம்பாடி கச்சேரி சாலை ஐயப்பன் நகர் பகுதியில் ஐயப்பன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
கார்த்திகை மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் இன்று (டிச. 12) சனிக்கிழமை என்பதால் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜையில் ஐயப்பனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சொர்ண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதனை காண ஏராளமானோர் கோயிலில் திரண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.