வெகுவிமரிசையாக நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம்! - thoothukudi news
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191வது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்டப் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11ஆம் திருநாள் தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை நடந்தது. பகல் 12.30 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியைச் சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தேரில் அமர்ந்திருந்த அய்யா வைகுண்டரை திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தேரோட்டத்தை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் ஐயா சிவ சிவ சிவ அரகர… அரகர சிவ சிவ.. என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மேலும் தேரோட்டத்திற்குப் பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது.