சென்னை அம்பத்தூரில் தானியங்கி சோலார் சிக்னல் திறந்து வைப்பு - solar traffic signal
🎬 Watch Now: Feature Video
சென்னையை அடுத்த அம்பத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ரோடு, வி.ஜி.என் ரோடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது மற்றும் 3வது பிரதான சாலை என முக்கியமான சாலைகளில் நேற்று புதிய சோலார் தானியங்கி சமிக்ஞை விளக்குகள் (Signal) நிறுவப்பட்டுள்ளது.
இதனை ஆவடி காவல் ஆணையர் அருண் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த தானியங்கி சமிக்ஞை விளக்குகள் மேலே பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளும். மேலும், அதனை சேமித்து வைத்து மழைக் காலங்களிலும் இந்த சமிக்ஞை விளக்குகள் எந்த வித இடர்பாடும் இன்றி செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சமிக்ஞை விளக்குகள் தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. தானியங்கி சமிக்ஞை விளக்குகள் நிறுவப்பட்டபோது போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி, கூடுதல் துணை ஆணையர் ஜெயாகரன், உதவி ஆணையர் மலைச்சாமி, காவல் ஆய்வாளர் சுஜிதா, உதவி ஆய்வாளர் முப்பிடாதி உள்பட பலர் இருந்தனர்.