Video: ஆர்யன் கானுக்கு முத்தம் கொடுத்த ரசிகர் - இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16388967-thumbnail-3x2-a.jpg)
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கௌரி கானின் மகன் ஆர்யன் கான் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நட்சத்திர வாரிசுகளில் ஒருவர் ஆவார். ஆர்யனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று (செப்-15)ஆர்யன் மும்பை விமான நிலையத்திற்குச் சென்றபோது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆர்யனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேலும் ஒரு ரசிகர் ஆர்யனுக்கு ரோஜா பூ ஒன்றைக்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அவரைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு ஆர்யனின் கையில் முத்தம் கொடுத்தார். ஆர்யன் எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் இயல்பாக இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST