நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி திருத்தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனித் திருத்தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு 8 மணியளவில் கொடிமரத்தில் கொடி பட்டம் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST