விவேக் பிறந்தநாள்; விவேக் உருவத்தை அப்துல் கலாம் படத்தைப் பயன்படுத்தி வரைந்த ஓவியர்! - Vivek
🎬 Watch Now: Feature Video
Published : Nov 19, 2023, 2:30 PM IST
விழுப்புரம்: ஓவியர் செல்வம், நடிகர் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரஷ், பென்சில் எதுவும் பயன்படுத்தாமல், அப்துல் கலாமின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வித்தியாசமான முறையில் விவேக்கின் உருவத்தை வரைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தவர், விவேக். ரசிகர்கள் இவரை அன்போடு “சின்ன கலைவாணர்” என அழைப்பர். நடிகர் விவேக், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நேர்மையான சிஷ்யன் ஆவார். அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்ட விவேக், அவர் கூறிய வார்த்தையை மறக்காமல், வருங்கால சந்ததியினருக்கு உதவும் வகையிலும், கலாம் கனவை நிறைவேற்றும் வகையிலும், ‘கிரீன் கலாம் அமைப்பு’ மூலமாக 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, சுமார் 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், ஏப்ரல் 17, 2021 அன்று விவேக் மரணம் அடைந்தார். இந்நிலையில், இன்று (நவ.19) நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய கனவான ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை நிறைவேற்றும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் சு.செல்வம், "அப்துல் கலாமின் சிஷ்யன் விவேக்" என்ற வாசகம் எழுதி பிரஷ், பென்சில் ஏதும் பயன்படுத்தாமல் அப்துல் கலாம் புகைப்படத்தை பயன்படுத்தி, எட்டு நிமிடங்களில் விவேக் உருவத்தை வரைந்துள்ளார்.