திருவண்ணாமலை நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் கூச்சல், சலசலப்பு - Tiruvannamalai Municipality Argument
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை நகராட்சியை சேர்ந்த 39 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கும் நகர மன்ற கூட்டம் இன்று (மார்ச் 26) நடைபெற்றது. நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் துணைத் தலைவர் ராஜாங்கம், நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர்கள் திருவண்ணாமலை நகராட்சியின் 39 வார்டுகளிலும் மழைக் காலங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு காரணமாக கழிவுநீர் தெருக்களிலும், சாலைகளிலும் செல்கிறது. இதன் காரணமாக வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இருப்பினும், இதுபோன்று அடைப்புக்கள் ஏற்படும்போது அவை உடனுக்குடன் சரி செய்யப்படுவது கிடையாது என்று குற்றம் சாட்டினர். இதற்கு திமுக நகர மன்ற உறுப்பினர்கள் பதிலளிக்கும்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நகர மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல், சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாளை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம்.. உள்ளிருப்பு போராட்டம் அறிவித்த காங்கிரஸ்..