Jailer Release celebration: ரசிகர்களுடன் படம் பார்த்த அனிருத் - பாடல் பாடி உற்சாகம்! - music director anirudh
🎬 Watch Now: Feature Video
சென்னை: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 900 மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. சென்னையில் முதல் காட்சி காலை 9மணிக்கு திரையிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் இன்று வெளியாகின்றது.
பான் இந்தியா முறையில் உருவாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இத்திரைப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா,வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் படம் வெளியான நிலையில் முதல் காட்சியை காண்பதற்காக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்குச் சென்று உள்ளார். அங்கு அவர் ரசிகர்களுடன் இணைந்து பாட்டு பாடியதால், தலைவர் படத்தை காண வந்த ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.