கலை உலகில் கின்னஸ் சாதனை படைக்கும் மதுரை பொறியாளர் - குவியும் பாராட்டுக்கள்! - தற்காப்பு கலை
🎬 Watch Now: Feature Video
Published : Sep 12, 2023, 4:37 PM IST
மதுரை: சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் விஜய் நாராயணன். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், டேக்வாண்டோ என்ற தற்காப்பு கலை மீது அதீத ஈடுபாடு கொண்டு வந்துள்ளார். இதனால் தனது 23-ஆவது வயதிலிருந்து டேக்வாண்டோ தற்காப்பு கலை பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து டேக்வாண்டோவில், இவர் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளின் கீழ், 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதில் தற்போது ஆணி படுக்கையில் படுத்தபடி, உடலுக்கு மேற்புறம் ஆணி படுக்கையை வைத்துக் கொண்டு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து, மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் நாராயணன்.
மூன்று நிமிடத்தில் 50 கான்கிரீட் பிளாக் கற்களை உடைத்ததே கின்னஸ் உலக சாதனையாக இருந்த நிலையில், 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து, தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார் பொறியாளர் விஜய் நாராயணன். இதையடுத்து இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.