புதுச்சேரியில் அமித்ஷா.. பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - புதுச்சேரியில் அமித்ஷா
🎬 Watch Now: Feature Video
சென்னை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று (ஏப்.24) காலை 10.10 மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அமித்ஷா கார் மூலம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வந்து அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த அமித்ஷாவை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு மகான் அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதியில் மலர் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST