பீட் பணம் கொடுக்கலைனா அவ்வளோ தான்..! கொள்ளையரிடம் கறார் காட்டிய தலைமைக் காவலர்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் நகர மற்றும் கிராமிய, உமராபாத் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் மணல் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வரும் ஆம்பூர் அடுத்த கட்டவாரபல்லி பகுதியைச் சேர்ந்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவர், மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், தலைமைக்காவலர் மணல் கொள்ளையரிடம், பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? என தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார். மேலும், பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்திவிடுவார் எனத் தலைமைக் காவலர் சீனிவாசன் கறாராகப் பேசும் ஆடியோ வைரலாகி, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இதுபோன்று மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் தலைமைக்காவலர் மீது உயர் அதிகாரிகள் துறை சார்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.