‘அஜித் ரசிகரா இருந்தாலும் ரஜினிதான் எனக்கு’.. போஸ்டரில் முத்தமிட்ட ரசிகர்! - jailer coimbatore poster
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: இன்று உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை திரையுலகத்தில் எழுந்துள்ளது. நடிகர் விஜய் படங்கள் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவிப்பதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும், ரஜினி படத்திற்குதான் அதிக வசூல் கிடைக்கும் எனவே, அவர்தான் சூப்பர் ஸ்டார் எனவும் தொடர்ந்து கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களிலும், திரையுலக நட்சத்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டார் என அவருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் கோவையில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதில் ”சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவும் முடியாது, ஜெயிலர் சாதனையை வெல்லவும் முடியாது அர்த்தமாயிந்தா ராஜா” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் அஜித் மற்றும் ரஜினி புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், கோவை ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைப் பார்த்த அஜித் ரசிகர் ஒருவர், போஸ்டரை பார்த்து, "அன்னைக்கு எம்ஜிஆர், முன்பு ரஜினி, இன்னைக்கு தல, தலய விட்டா யாரும் இல்ல, தல கிட்ட அன்பு இருக்கு, பாசம் இருக்கு, தல ரசிகராக இருந்தாலும் தலைவர்தான் எனக்கு" என சொல்லி போஸ்டரில் உள்ள ரஜினி மற்றும் அஜித் படத்திற்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார்.