உளுந்து விதைக்கு ரசீது கேட்ட விவசாயியை ஒருமையில் பேசிய வேளாண்மை துறை அதிகாரி - வீடியோ வைரல்! - வேளாண்மை துறை
🎬 Watch Now: Feature Video
Published : Jan 4, 2024, 9:31 AM IST
திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் தனது நிலத்தில் உளுந்து பயிரிடுவதற்கு பெரணமல்லூர் வேளாண்மை துறை அலுவலகத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி உளுந்து விதை வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு ரசீது வேண்டும் என பணியிலிருந்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் வேளாண்மை துறை உதவி இயக்குனர் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விவசாயி பிரகாஷ் பலமுறை முறையிட்டு ரசீது கேட்டபோது, அப்போது பணியில் இருந்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் விவசாயி பார்த்து அநாகரீகமாகவும், தகாத முறையில் பேசி திட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து விவசாயியை தாக்க முயற்சி செய்துள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆகையால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோவில், கொடுத்த பணத்திற்கு ரசீதி கொடுங்க முடியாது என்றால், நான் கொடுத்த 500 ரூபாயை திருப்பிக் கொடுங்கள் என விவசாயி கேட்கிறார். அதற்கு நான் உன்னிடம் கேட்டேனா, இங்கிருந்து வெளியே போ என சில வார்த்தைகள் திட்டுயுள்ளார். அதனைத் தொடர்ந்து, விவசாயியும் பேசியதற்கு, என்னைப் பார்த்து நீ எப்படி யோ என சொல்லுகிறார், நான் என்ன உன் வீட்டில் ஆடு மேய்க்கிறேனா என வேளாண்மை துறை அதிகாரி தாக்கவும் முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.