தேனி அய்யம்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!
🎬 Watch Now: Feature Video
தேனி: சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுமார் 670 மாடுகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில், மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டு களித்து வருகின்றனர்.
ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி உட்பட 600க்கும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யம்பட்டியில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் வருகை புரிந்து போட்டியைக் கண்டுகளித்து வருகின்றனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிகமான பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டது. கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் சில்வர் அண்டா, பைக், தங்கக் காசு போன்ற பரிசுகள் வாரி வழங்கப்பட்டது.