கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தல்: ஆளுநர் தலையிட எஸ்.பி.வேலுமணி கோரிக்கை! - coimbatore airport
🎬 Watch Now: Feature Video
கோவை: சென்னையிலிருந்து கோவை திரும்பிய ஆ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் உட்பட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கோவையிலிருந்து 5 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிற்குக் கடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததா எனத் தெரியவில்லை.
தி.மு.க அரசு எதிலும் கவனம் செலுத்தவில்லை. டாஸ்மாக் பிரச்சனையை விட இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. எம் சாண்ட் சுரங்கங்களை முடக்கி மீண்டும் மணல் குவாரிகள் அமைக்கும் வாய்ப்பை இந்த அரசு உருவாக்கியுள்ளது. கேரளாவிலிருந்து ஒரு லோடு மணல் கூட எடுத்து வர முடியாது.
தமிழகத்திலிருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் தலையிட்டு கனிம வளங்களைக் கேரளாவிற்குக் கடத்துபவர்கள் மற்றும் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் குறைந்த விலையில் வழங்கப்பட்டது.
தி.மு.க அரசு, அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடங்கியுள்ளது. திமுக அரசு எதுவும் செய்யவில்லை" எனத் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு, டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.