நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்! - நடிகை யாஷிகா ஆனந்த்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 27, 2023, 3:40 PM IST

செங்கல்பட்டு: கார் விபத்து வழக்கில் பிடிவாரன்ட் பிறக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் இன்று ( மார்ச் 27 ) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மாமல்லபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் யாஷிகா ஆனந்துடன் பயணித்த அவரது தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து மற்றும் பவானி உயிரிழந்த விவகாரம் குறித்து மகாபலிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மார்ச் மாதம் நேரில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. 

இதனைத்தொடர்ந்து யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று (மார்ச் 27) யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு - அமலாக்கத்துறையை எதிர்த்து கேசிஆர் மகள் கவிதா மனு - இன்று விசாரணை!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.