பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்! - Dindigul district news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். முன்னதாக மலை அடிவாரத்தில் 3 கிலோமீட்டர் தூரம் கிரிவலப்பாதையில் சந்தானம் கிரிவலம் வந்தார். பின்னர் ரோப்கார் மூலமாக மலையின் மேல் வந்த சந்தானம், முருகனை தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சந்தானம் நடித்து வரும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.