எட்டயபுரத்தில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ்ஸில் விபத்து..! பந்தய வீரர்கள், பார்வையாளர்களுக்கு காயம்! - tamilnadu news
🎬 Watch Now: Feature Video
Published : Nov 5, 2023, 2:12 PM IST
தூத்துக்குடி: எட்டயபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது குருபூஜையை முன்னிட்டு எட்டயபுரம் - விளாத்திகுளம் சாலையில், மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய மாடுகளுக்கான முதல் சுற்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தொடர்ந்து 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட சிறிய மாடுகளுக்கான முதல் சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மாட்டு வண்டிகள் இருந்தன. போட்டி தொடங்கியதும் வண்டிகள் சீறிப்பாயத் தொடங்கின. அவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வேகமாகச் சென்றதால் மாட்டு வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பார்வையாளர்கள் உட்பட மாடுகள் மற்றும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி, மாட்டு வண்டிகள் செல்வதற்கு போதிய வழியின்றி சாலையின் இரு புறமும் அதிகப்படியான பார்வையாளர்கள் கூடியிருந்தது தான் விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.