ஜார்க்கண்டில் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி? - land caved into about five feet
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16967696-thumbnail-3x2-jar.jpg)
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் கபசரா அவுட்சோர்சிங் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சுரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று அதிகாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 200 மீட்டர் பரப்பளவில் சுமார் 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 12 தொழிலாளர்கள் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST