White Snake: சாலையில் ஊர்ந்து சென்ற வெள்ளை நிற பாம்பு.. வைரலாகும் வீடியோ! - python
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: பென்னாகரம் அடுத்துள்ள கரியம்பட்டியில் இருந்து முதுகம்பட்டி கிராமம் வரை தார்ச் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் அருகே உள்ள நாய்க்கனேரி என்ற கிராமத்தில் நீர்நிலை குட்டையில் வெள்ளை நிற சாரைப்பாம்பு ஒன்று மிதந்து கிடந்தது. சுமார் 8 அடி நீளம் கொண்ட அந்த அரிய வகை வெள்ளை நிற சாரைப்பாம்பு குட்டை பகுதியிலிருந்து வெளியேறி சாலையைக் கடந்து சென்றது.
இதனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் வெள்ளை நிற பாம்பு ஊர்ந்து செல்வதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதேநேரத்தில் சாலையில், சாலையில் ஊர்ந்து சென்ற பாம்பை சிலர் குச்சியை வைத்து சீண்டியது வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தியது. வீடியோவுக்கு கீழே இந்த பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர் வனப்பகுதியில் கொண்டுச் சென்று விட வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.