Viral Video: பசியில் தவித்த கன்றுக்குட்டிக்கு தாயாக மாறிய நாய்! - சித்தூர் கேட் பாஷா நகர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18740183-thumbnail-16x9-vlr.jpg)
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பாஷா நகர் பகுதியில் யாஸ்மின் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த நாய் ஒன்றுக்கு, அவர் தினம் தோறும் உணவு கொடுத்து வளர்த்து வருகிறார். மேலும், யாஸ்மின் வீட்டில் தாயற்ற நிலையில் ஒரு கற்றுக்குட்டி ஒன்று உள்ளது.
அந்த கன்றுக் குட்டிக்கு மிகுந்த பசி எடுத்த சூழலில், வேறு வேறு இனமாக இருந்தாலும், அதன் பசியை உணர்ந்த நாய் அதற்கு பால் கொடுத்து தாயாக மாறியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் சில தாய்மார்கள் தன் அழகை பாதுகாத்துக் கொள்ள பெற்ற பிள்ளைகளுக்கே பால் கொடுக்க மறுக்கும் சூழலில், தெருவோரம் வசித்து வரும் நாய் ஒன்று கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் சம்பவம் பாசத்தின் உச்சம் என்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இணைய வாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.