பச்ச உடம்புக்காரி பார்த்து நடக்கச்சொல்லுங்க - கைக்குழந்தையை தூக்கி வைத்து பெண்ணுக்கு உதவிய காவலர்
🎬 Watch Now: Feature Video
கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் அவரது தாயாருடன் ரயில் நிலையம் சென்றிருந்தார். அப்போது இளம் பெண் வெயிலின் தாக்கத்தால் அப்பெண் அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் சிறிது நேரம் நின்றுள்ளார்.
அப்போது இளம்பெண் வைத்திருந்த கைக்குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர் குமார் (27) வாங்கிக் கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கை அருகே அமரக் கூறி தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும் சுமார் 20 நிமிடங்கள் குழந்தையை காவலர் கிஷோர் குமார் தான் வைத்திருந்தார். இதனை சக போக்குவரத்து காவலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் கடும் வேலைக்கு இடையே போக்குவரத்து காவலரின் மனிதநேயச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: பென்சில் நுனியில் மாஸ்க் செய்து விழிப்புணர்வு.. கோவை ஆட்டோ ஓட்டுநர் அசத்தல்!