சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ விபத்து!

By

Published : Jun 2, 2023, 3:01 PM IST

thumbnail

சென்னை: எழும்பூர் எத்திராஜ் சாலையில் பிரசிடென்சி கிளப் என்னும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டதில் தீ விபத்து பிரசிடென்சி கிளப்பின் அலுவலகங்கள் செயல்படும் கட்டிடத்தில் தான் நிகழ்ந்ததாகத் தெரியவந்து உள்ளது. இந்தக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சமையல் அறைகளும், தீ விபத்து நிகழ்ந்த முதல் தளத்தில் அலுவலகங்களும் செயல்பட்டதாகக் கூறி உள்ளனர்.

வழக்கம் போல் அறையைத் திறந்து ஏசி சுவிட்ச் ஆன் செய்தபோது மின் கசிவு ஏற்பட்டுள்ளது என ஊழியர்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஆகவே உடனடியாக மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்து உள்ளனர். ஊழியர்கள் பழுது பார்ப்பதற்கு முன்னதாக தீ திடீரென உருவாகி அறை முழுவதும் பரவி உள்ளது. விடுதியில் தீ வேகமாகப் பரவியதால் அறையிலிருந்த விடுதி சம்பந்தமான பல்வேறு கோப்புகள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கட்டிடத்தில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் நபர்களை வெளியில் அனுப்பியுள்ளனர். பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் முதல் தளத்தில் மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.