ஷூவுக்குள் இருந்து ஷாக் கொடுத்த நாகப்பாம்பு..! பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது..!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர்ப் பகுதியில் பிரதீப் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவர், தனது வீட்டிலிருந்த காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது, காலணியிலிருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலணியைப் பார்த்த போது, காலணிக்குள் (shoe) பாம்பு ஒன்று இருந்துள்ளது.
அதனைக் கண்டவுடன் அச்சிறுவன் தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். பின்னர், அவரது பெற்றோர்கள் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் என்பவருக்குத் தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் வந்த பாம்பு பிடி வீரர். பாம்பைப் பத்திரமாகப் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிடிபட்டது நாகப்பாம்பு வகையைச் சார்ந்தது என்பது தெரியவந்தது. மேலும், மழைக்காலங்களில் பாம்புகள் அதிக அளவில் உலா வரும் என்றும், அவை கதகதப்பான இடத்தை தேடி வரும் என்றும், அதன் காரணமாகக் காலணிக்குள் புகுந்திருக்கும் எனப் பாம்பு பிடி வீரர் கூறியுள்ளார். இதனையடுத்து பிடித்த நாகப்பாம்பை வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.