ஷூவில் பதுங்கியிருந்த பாம்பு - வைரல் வீடியோ! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சிறைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது குழந்தைகள் வழக்கம்போல இன்று (பிப்.14) பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டு வாசலிலிருந்த ஒரு ஷுவை எடுத்த குழந்தை காலில் அணிவதற்கு முயன்றது. அப்போது அதன் உள்ளே பாம்பு இருப்பதைக் கண்ட குழந்தை அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த பாம்பு பிடி வீரரான பரமேஸ்தாஸ் ஷுவில் இருந்த பாம்பை லாவகமாக வெளியே எடுத்தார். வெளியே எடுத்த அந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்து எனத் தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.
இவ்வாறு ஷு உள்ளிட்ட காலணிகள், வீட்டில் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்கள், நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட பழைய சாமான்கள் உள்ளிட்டவைகளின் தேள், பூரான், பாம்புகள் போன்றவை தட்ப வெப்பநிலை காரணமாக வந்து உள்ளே இருப்பது வழக்கம். எனவே, வீடுகளில் இத்தகைய நஞ்சுள்ள உயிரினங்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் நமது குழந்தைகளை அவற்றின் அருகே செல்வதைத் தவிர்க்கவும். இத்தகைய உயிரினங்களை நாம் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். அதே நேரத்தில் நாமும் அவற்றிடமிருந்து விலகியிருப்பது நல்லது.