காவிரியில் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வரத்து.. ஒகேனக்கலில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 1, 2023, 2:11 PM IST
தருமபுரி: பொன்னகரம் அருகே உள்ள, தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் இன்று (செப்.1) நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர்வரத்தானது உயர்ந்து உள்ளது.
நேற்று காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில், இன்று மேலும் 4 ஆயிரம் கன அடி அதிகரித்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் ஒகேனக்களுக்கு வரும் இந்த தண்ணீரானது இன்று மாலை அல்லது நாளை, மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.