'4 கிலோ தக்காளி 100 ரூபாய்'.. கூவி கூவி விற்ற வியாபாரி.. அள்ளிச் சென்ற மக்கள்! - கூவி கூவி விற்ற வியாபாரி
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமையலுக்கு அத்தியாவசியப் பொருளான தக்காளியை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
தற்போது ஒரு கிலோ தக்காளி 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று குடியாத்தம் பகுதியில் வேனில் எடுத்துவரப்பட்ட தக்காளியை 4 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
சந்தையிலும் கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் சாலையோரம் வாகனத்தில் 25 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் மகிழ்ச்சியுடன் தக்காளியை வாங்கிச் சென்றனர்.
மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து மூன்று சக்கர வாகனத்தில் விற்பனை செய்வதால் விலை குறைவாக விற்பனை செய்வதாக தக்காளி வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்: வீட்டு வரி ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம்!