சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.. 8 கிமீ தூரம் பயணம் செய்த 3ஆம் வகுப்பு சிறுவன்! - today latest news
🎬 Watch Now: Feature Video
Published : Oct 15, 2023, 2:13 PM IST
திண்டுக்கல்: வத்தலகுண்டில் ரோட்டரி சங்கம் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தூய்மையான பேரூராட்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் 13 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதன் அடிப்படையில், இன்று (அக்.15) காலை வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு சைக்கிள் பேரணியை, பேரூராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். வத்தலகுண்டு பேரூராட்சியில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி, சேவுகம்பட்டி பேரூராட்சி, பட்டிவீரன்பட்டி பேரூராட்சி வழியாகச் சென்று, அய்யம்பாளையம் பேரூராட்சியில் முடிவடைந்தது. சுமார் 8 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியில் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
அதிலும் குறிப்பாக சைக்கிள் பேரணியில் கிட்ஸ் சைக்கிள் என்று அழைக்கக்கூடிய சிறுவர்கள் சைக்கிளுடன் பங்கேற்ற 3ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் தங்கப்பாண்டி, தனது சிறிய சைக்கிளில் 8 கிலோ மீட்டர் வரை விடாமல் ஓட்டி வந்து பேரணியில் பங்கேற்று. விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் சிறுவனின் இந்த பங்களிப்பை அனைவரும் பாராட்டினர்.