அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு.. அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன ?? - அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு
🎬 Watch Now: Feature Video
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேனை செயற்குழு மற்றும் பொதுக்குழு தலைமையேற்க முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அழைத்தார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். வரவேற்பு உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி " ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ பாடலை பாடினார். அதன் பின் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, "அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்து விட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை வர வேண்டும். அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST