1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், ராஜ அலங்காரமும் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அதியமான் கோட்டையில் உள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 8) தேய்பிறை அஷ்டமியொட்டி கால பைரவருக்கு பால், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
காலபைரவரை தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கால பைரவருக்கு தாமரை உள்ளிட்ட பல வகையான வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிலின் முன் பகுதியில் சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சம் பழங்களில் தீபம் ஏற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி, சுவாமியை வணங்கினர்.
இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது